Tuesday, July 28, 2015
Monday, July 27, 2015
இடக்கரடக்கல்
சபையில் அல்லது
மற்றவர் முன்
கூறத்தகாத சொல்லை அல்லது சொற்றொடரை வேறொரு
சொல்
அல்லது
சொற்றொடர் கொண்டு
வெளிப்படுத்துதல் இடக்கரடக்கல் எனப்படும். “இடக்கர்” என்பதற்கு சொல்லக்கூடாத சொல்
என்று
பொருள். அமங்கள
நிகழ்வை மங்களப்படுத்திக்கூறுவதும் இடக்கரடக்கலாகவே கொள்ளப்படும்.
சில உதாரணங்கள்
மலம் கழிக்கப் போனான் என்பதை “காட்டுக்குப் போனான்”,
“கொல்லைக்குப் போனான்”, “வெளியே போனான்” என்று சொல்லுதல்.

கால் கழுவி வந்தான் ஒன்றுக்குப் போனான் வயிற்றுப்போக்கு (அவனுக்கு வயித்தால போகுது)விளக்கு மங்கலாக ஒளிர்வதை கூடப்பற்றுகிறது எனக்கூறல்
Tuesday, July 21, 2015
| யாக்கை நிலையாமை | |||||||
| |||||||
Monday, July 20, 2015
இளமை நிலையாமை
| ||||||
Friday, August 22, 2014
நாலடியார் நட்பு
நட்பாராய்தல்
நாய்க் கால் சிறு விரல்போல் நன்கு அணியர் ஆயினும்,
ஈக் கால் துணையும் உதவாதார் நட்பு என்னாம் சேய்த்தானும்
சென்று கொளல்வேண்டும் செய் விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு.
விளக்கம்:
நாய்க்கால்சிறுவிரல்போல் நன்கு அணியராயினும் ஈக்கால்துணையும் உதவாதார் நட்பு என்னாம் நாய்க்காலின் சிறிய விரல்கள் நெருக்கமாயிருப்பதுபோல் மிகநெருக்கமுடையாராயினும் ஓர் ஈக்காலினளவும் உதவிசெய்யாதவரது நட்பு என்ன பயனுடையதாகும்?;
சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும்செய்விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு -கழனி, முழுமையும் விளைக்கும் நீர்க்காலை ஒத்தஇயல்பினரது தொடர்பு தொலைவிலுள்ளதாயினும்அதனைத் தேடிச் சென்று அடைதல் வேண்டும்.
உதவும் இயல்பினரே நட்புச்செய்தற்குரியர். (வி-ம்.) நாய்க்காற் சிறுவிரல்இழிவுக்காக வந்த உவமம். ஈக்கால், ஈ என்னும்மிகச் சிறிய பறவையினது கால் ; இது சிறுமைக்குஎடுத்துக்காட்டுவதோர் அளவு. வேண்டும் என்பது ஏவல்கண்ணிய வியங்கோள் ;
உம் ஈற்றான் வந்தது.1வாய்க்காலின் இயல்பு. கழனியினிடமிருந்துஎஞ்ஞான்றுந் தான் ஓர் உதவி பெறுதலின்றாயினும்உற்ற நேரங்களில் தொலைவிலிருந்து தானேமுற்போந்து ஓடி வளம் உதவி அவ் வயல்முழுமையும்விளையச் செய்தல். நண்பரது இருப்பின்சேய்மை அவர் தொடர்பின்மேல் ஏற்றப்பட்டது.

Saturday, May 17, 2014
Tuesday, May 13, 2014
Monday, May 12, 2014
Sunday, May 11, 2014
Thursday, May 8, 2014
Monday, April 28, 2014
Saturday, April 26, 2014
Subscribe to:
Comments (Atom)